Infosys Net Profit Growth: இன்ஃபோசிஸ் நிகர லாபம் 6.2% உயர்வு கண்ட நிலையில், ரூ.7,823 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
Infosys Net Profit Growth: இன்ஃபோசிஸ் நிகர லாபம் 6.2% உயர்வு கண்ட நிலையில், ரூ.7,823 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

Published on: October 25, 2026 at 2:44 pm
சென்னை, அக்.25, 2026: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.7,823 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.7,364 கோடியாக இருந்த நிகர லாபம், தற்போது 6.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.49,244 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.44,490 கோடியாக இருந்த வருவாய், தற்போது சுமார் 11 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு சேவைகளுக்கான தேவை அதிகரித்ததும் இந்த வளர்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.26 இடைக்கால ஈவுத்தொகை வழங்க இன்ஃபோசிஸ் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பதிவு தேதி நவம்பர் 3ஆம் தேதியாகவும், ஈவுத்தொகை வழங்கும் தேதி நவம்பர் 11ஆம் தேதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2026–27 நிதியாண்டுக்கான வருவாய் வளர்ச்சி கணிப்பை 1.5 முதல் 3 சதவீதம் என்ற அளவிலிருந்து 1 முதல் 2 சதவீதமாக நிறுவனம் குறைத்துள்ளது. சந்தையில் நிலவும் விலைப் போட்டி மற்றும் வாடிக்கையாளர்களின் செலவின அழுத்தம் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com