TNPSC Hall Ticket: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
TNPSC Hall Ticket: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.

Published on: October 22, 2026 at 12:31 pm
சென்னை, அக்.22, 2026: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடைபெற உள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. நவம்பர் 1, 2026 அன்று நடைபெற உள்ள இத்தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றுக்குச் சென்று ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.
இதற்காக, விண்ணப்பதாரர்கள் தங்களது One-Time Registration (OTR) கணக்கில் உள்நுழைந்து, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்ய வேண்டும். ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தேர்வு மைய விவரங்களைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஆட்சேர்ப்புக்கான மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 846 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் குரூப் 2 பணியிடங்கள் 43 ஆகவும், குரூப் 2ஏ பணியிடங்கள் 803 ஆகவும் உள்ளன. முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாகத் தேர்வு நடைபெற உள்ளது.
இதையும் படிங்க : ‘வெற்றி 150’ திட்டம்: ரூ.100 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசு.. முழு விவரம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com