Chithra’s Unfulfilled Dreams: மம்மூட்டி, மோகன்லாலுடன் நடித்த நடிகை சித்ராவின் நிறைவேறாத இரண்டு கனவுகள் குறித்து பார்க்கலாம்.
Chithra’s Unfulfilled Dreams: மம்மூட்டி, மோகன்லாலுடன் நடித்த நடிகை சித்ராவின் நிறைவேறாத இரண்டு கனவுகள் குறித்து பார்க்கலாம்.

Published on: October 20, 2026 at 4:02 pm
திருவனந்தபுரம், அக்.20, 2026: மலையாளம் மற்றும் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய சித்ரா, தனது திறமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். 1983-ஆம் ஆண்டு வெளியான ஆட்டக்கலாசம் திரைப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர், மம்மூட்டியுடன் இணைந்து நடித்த அமரம் திரைப்படம் அவருக்குப் பெரும் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.
சிறுவயதிலேயே திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய சித்ரா, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஊர்க்காவலன், புதிய பயணம், சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்ததுடன், நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததன் மூலம் ‘நல்லெண்ணெய் சித்ரா’ என்றும் பிரபலமானார். திரையுலகில் வளர்ந்து வந்தபோதிலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சவால்களைச் சந்தித்தார்.
குடும்பச் சூழல் காரணமாகத் திரையுலகிலிருந்து விலகிய சித்ரா, 1990-ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மகாலட்சுமி என்ற மகள் உள்ளார். திருமணத்துக்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய அவர், பின்னர் மீண்டும் நடிக்க வந்தாலும் முன்பு கிடைத்த அளவிலான வெற்றியைப் பெற முடியவில்லை. சிறந்த நடிகைக்கான மாநில விருதைப் பெற வேண்டும் என்பதும், இயக்குநர் ஃபாசிலின் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதும் அவரது நிறைவேறாத கனவுகளாக இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி, சென்னையில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக சித்ரா தனது 56-வது வயதில் உயிரிழந்தார். அவர் இறப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, தனது நெருங்கிய தோழியும் நடிகையுமான குட்டி பத்மினியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மகளைக் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல மொழிகளில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்த சித்ராவின் மறைவு, தென்னிந்தியத் திரையுலகிற்கு ஏற்பட்ட இழப்பாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : கலெக்ஷன் மன்னன். ரூ.500 கோடியை நெருங்கும் ஜெயிலர் 2
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com