பெண்களுக்கு 5,000 பட்டுப்புடவைகள் வழங்கும் ராகவா லாரன்ஸ்.. முழு விவரம்!

Raghava Lawrence: ராகவா லாரன்ஸ், தனது அறக்கட்டளையின் சார்பில் 5,000 பெண்களுக்கு பட்டுப்புடவைகள் வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

Published on: October 20, 2026 at 12:19 pm

சென்னை, அக்.20, 2026: நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது அறக்கட்டளையின் சார்பில் 5,000 பெண்களுக்கு பட்டுப்புடவைகள் வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். ‘பட்டுப்புடவை திட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முயற்சி, லாரன்ஸ் அறக்கட்டளையின் 20 ஆண்டுகால சேவையை முன்னிட்டு தொடங்கப்பட உள்ளது.

தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில், சேவைப் பணிகளின்போது ஒரு பெண் தனக்குப் பட்டுப்புடவை வேண்டும் எனக் கடிதம் அளித்ததாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தைப் படித்தபோது, கிராமப்புறங்களில் பல பெண்களுக்கு பட்டுப்புடவை அணியும் வாய்ப்புகூடக் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, பொருளாதார வசதியில்லாத பெண்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக 5,000 பட்டுப்புடவைகளை வழங்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் கல்வி, இதய அறுவை சிகிச்சைகளுக்கான உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு, உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகளை அவரது அறக்கட்டளை கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

ராகவா லாரன்ஸின் பிறந்தநாளான அக்டோபர் 29ஆம் தேதி, அவர் பிறந்து வளர்ந்த சென்னை ராயபுரத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. பெண்களுக்கு உதவுவதும் அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுப்பதுமே இந்த முயற்சியின் நோக்கம் எனத் தெரிவித்துள்ள அவர், பொதுமக்களின் ஆசிகளையும் ஆதரவையும் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க : மும்பையில் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச் சூடு.. யார் காரணம்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com