மும்பையில் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச் சூடு.. யார் காரணம்?

Tiger Shroff Firing Incident: மும்பையில் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர் காயங்கள் இன்றி உயிர் தப்பியுள்ளார்.

Published on: October 19, 2026 at 2:28 pm

மும்பை, அக்.19, 2026: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது மும்பையின் ஜூஹு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கால்பந்து விளையாடிவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் அவரது காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் டைகர் ஷெராஃப் காயமின்றி உயிர் தப்பினார்.

ஜூஹுவில் உள்ள புஷ்பா பார்க் பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. டைகர் ஷெராஃப்பின் ஓட்டுநர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். மேலும், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மும்பை காவல்துறையினர் மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையைத் தொடங்கினர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பதாகச் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பொறுப்பேற்றதாகக் கூறப்படும் தகவல்களும் வெளியாகியுள்ளன. எனினும், இந்தக் கூற்றுகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் கிடைக்காத நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : சபாஷ் சரியான போட்டி.. கீர்த்தி Vs ராதிகா.. யார் அக்கா? வெப் சீரிஸ் ரெடி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com