தீபாவளிக்கு முன் 4 புதிய பீர்கள் அறிமுகம்.. தமிழ்நாடு அரசு

TASMAC Diwali Beer Launch: தீபாவளிக்கு டாஸ்மாக் கடைகளில் 4 புதிய பீர் வகைகள் அறிமுகம் ஆகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published on: October 18, 2026 at 11:52 am

சென்னை, அக்.18, 2026: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நான்கு புதிய பீர் வகைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விலை ரூ.250 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் மதுபான விற்பனையை அதிகரிப்பது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள பீர் வகைகளில் பீரா (Bira), ஹெய்னெகன் சில்வர் (Heineken Silver), சிம்பா ரோர் (Simba Roar), லோன் வுல்ஃப் (Lone Wolf) ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவற்றில் ஹெய்னெகன் சில்வர் கர்நாடகத்தில் இருந்தும், சிம்பா ரோர் மற்றும் லோன் வுல்ஃப் ஆகியவை சத்தீஸ்கரில் இருந்தும் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் எலைட் மதுபானக் கடைகளில் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், வோட்கா, பீர் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட மதுபான வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. புதிய பீர் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டால், டாஸ்மாக் கொள்முதல் பட்டியலில் உள்ள பீர் வகைகளின் எண்ணிக்கை 21-ல் இருந்து 25 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பீர் வகைகளை விற்பனைக்குக் கொண்டுவருவதற்கு தமிழக அரசின் அனுமதி மற்றும் தேவையான பதிவு நடைமுறைகள் நிறைவடைய வேண்டும். இதற்கான ஒப்புதல் கிடைத்த பின்னரே கொள்முதல் மற்றும் விற்பனை தொடங்கும். எனவே, தீபாவளிக்கு முன்பாகவே இவை விற்பனைக்கு வருமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இதையும் படிங்க : பிரியாகோல்டு பிஸ்கட் சர்ச்சை.. நிறுவனத்துக்கு எதிராக FSSAI நடவடிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com