அதிமுகவில் ஓபிஎஸ் மீண்டும் இணைய வேண்டும்.. எஸ்.பி.வேலுமணி விருப்பம்

OPS Rejoining AIADMK: அதிமுகவில் ஓபிஎஸ் மீண்டும் இணைய வேண்டும் என எஸ்.பி.வேலுமணி விருப்பம் தெரிவித்துள்ளார்.

Published on: October 17, 2026 at 7:42 pm

Updated on: October 17, 2026 at 8:35 pm

சென்னை, அக்.17, 2026: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினரை ஒன்றிணைக்க வேண்டும் என்ற அழைப்புக்கும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்து அதிமுகவை வலுப்படுத்த வேண்டும் என்றும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீண்டும் கட்சிக்குத் திரும்ப வேண்டும் என்றும் வேலுமணி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை மீண்டும் வலிமையான நிலைக்குக் கொண்டுவருவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுகவை விட்டு விலகப்போவதாக வெளியான தகவல்களையும் மறுத்த அவர், தனக்கு அரசியல் அடையாளத்தை வழங்கியது அதிமுகதான் என்று குறிப்பிட்டார். மேலும், எடப்பாடி பழனிசாமியே கட்சியின் பொதுச்செயலாளராகத் தொடர்ந்து செயல்படுவார் என்றும், அந்தப் பதவியின் மீது தனக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்வியைக் குறிப்பிட்ட வேலுமணி, கட்சியின் அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ‘பிரேக்கிங் பேட் பார்ட்டி’ என தவெகவை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com