மாலத்தீவில் 25 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு.. மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்!

CM Vijay: மாலத்தீவில் 25 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

Published on: October 16, 2026 at 11:39 am

சென்னை, அக்.16, 2026: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 தமிழக மீனவர்களை மாலத்தீவு கடலோரக் காவல்படையினர் கைது செய்துள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார். மீனவர்கள் சென்ற மூன்று விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் மீனவர்களின் குடும்பத்தினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் விஜய், கடந்த அக்டோபர் 13ஆம் தேதி அதிகாலையில் மீனவர்கள் மாலத்தீவு கடலோரக் காவல்படையினரால் சிறைபிடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இந்த நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர்.

மாலத்தீவு அரசுடன் உரிய தூதரக வழிகளில் பேச்சுவார்த்தை நடத்தி, சிறைபிடிக்கப்பட்ட 25 மீனவர்களையும் அவர்களது மூன்று படகுகளையும் விரைவாக மீட்க வேண்டும் என்றும், மீனவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தியுள்ளார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் நேரடித் தலையீடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தமிழக மீனவச் சமூகத்தினருக்கும் நம்பிக்கையளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : நாகர்கோவில் சிறையில் வியாபாரி அடித்துக் கொலை? 11 பேர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com