தமிழகத்தில் ஆன்லைன் வளர்ச்சி 100 சதவீத உயர்வு.. அதிர்ச்சி தகவல்

Online Sales Growth: தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்கள் ஆன்லைன் விற்பனை 100% வளர்ச்சி கண்டுள்ளது.

Published on: October 15, 2026 at 3:39 pm

சென்னை, அக்.15, 2026: தமிழகத்தில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் ஆன்லைன் விற்பனை அதிகரித்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2026’ விற்பனைத் திருவிழாவின்போது, தமிழகத்தில் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களின் விற்பனை, வழக்கமான நாளுடன் ஒப்பிடுகையில் 100 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

மளிகைப் பொருட்கள், சிற்றுண்டிகள், குழந்தைகளுக்கான பொருட்கள், செல்லப்பிராணிகளுக்கான உணவுப் பொருட்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கான ஓட்ஸ் விற்பனை மூன்று மடங்காகவும், விதைகள் மற்றும் உலர் பழங்கள் விற்பனை இரண்டரை மடங்காகவும் அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கான பராமரிப்புப் பொருட்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான உணவுப் பொருட்களின் விற்பனையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

சென்னை, கோவை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் 11 நகரங்களில் அமேசான் நவ் சேவை மூலம் காய்கறிகள், பழங்கள், பால், ரொட்டி உள்ளிட்ட அன்றாடத் தேவைகளை விரைவாகப் பெறும் வசதி வழங்கப்படுகிறது. இந்திய அளவில் அமேசானின் பண்டிகைக் கால விற்பனை தொடக்கத்தில் 44 கோடிக்கும் அதிகமான வருகைகள் பதிவாகியுள்ளன. பெருநகரங்களுக்கு வெளியேயும் ஆன்லைன் கொள்முதல் அதிகரித்து வருவது, டிஜிட்டல் வணிகத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்துவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : கைமாறிய ஐ.டி.பி.ஐ வங்கி.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com