India vs West Indies T20 Series: இந்தியாவை, வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்திய நிலையில், டி20 தொடர் 2-2 என சமனாகியுள்ளது.
India vs West Indies T20 Series: இந்தியாவை, வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்திய நிலையில், டி20 தொடர் 2-2 என சமனாகியுள்ளது.

Published on: October 15, 2026 at 2:29 pm
ஹைதராபாத், அக்.15, 2026: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என சமன் செய்தது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, கேப்டன் ஷாய் ஹோப்பின் அதிரடி சதத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 102 ரன்கள் எடுத்தார். ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட் 49 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்.
248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடியான தொடக்கத்தை அளித்தார். அவர் 23 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 43 ரன்களும், நிதிஷ் குமார் ரெட்டி 41 ரன்களும் எடுத்தனர். இருப்பினும், இந்திய அணியால் இலக்கை எட்ட முடியவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் கீமோ பால் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். இறுதியில் இந்திய அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் தொடர் 2-2 என சமநிலையில் உள்ள நிலையில், தொடரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி வரும் அக்டோபர் 17ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க : டெல்லி அணியில் கங்குலி, யுவராஜ் சிங்.. என்னென்ன பொறுப்புகள் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com