Ranabali Movie Release: ‘ரணபாலி’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது; இந்தப் படம் அக்டோபர் 16-ல் வெளியாகிறது.
Ranabali Movie Release: ‘ரணபாலி’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது; இந்தப் படம் அக்டோபர் 16-ல் வெளியாகிறது.

Published on: October 15, 2026 at 2:19 pm
சென்னை, அக்.15, 2026: விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ‘ரணபாலி’ திரைப்படத்துக்கு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வெளியாவதற்கு முன்னதாக தணிக்கை நடைமுறைகள் நிறைவடைந்துள்ளன. ராகுல் சங்கிரித்யன் இயக்கியுள்ள இந்தப் படம், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ராயலசீமா பகுதியில் மக்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகளையும், அதற்கு எதிரான போராட்டத்தையும் மையமாகக் கொண்ட காலகட்டத் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இதில் விஜய் தேவரகொண்டா ரணபாலி என்ற கதாபாத்திரத்திலும், ராஷ்மிகா மந்தனா ஜெயம்மா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும், ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லூவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள ‘ரணபாலி’ திரைப்படம், வரும் அக்டோபர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி மீண்டும் இணைந்துள்ளதால், இப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க : நடிகர் இம்ரான் கானிடம் அமெரிக்க குடியுரிமை? காவல் நிலையத்தில் பா.ஜ.க புகார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com