Pa Ranjith | தண்டகாரண்யம் படத்தின் முதல் பார்வை நாளை (செப்.27, 2024) மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
February 6, 2025
Pa Ranjith | தண்டகாரண்யம் படத்தின் முதல் பார்வை நாளை (செப்.27, 2024) மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
Published on: September 26, 2024 at 10:30 pm
Pa Ranjith | புரட்சி இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தண்டகாரண்யம். இந்தப் படத்தை அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். படத்தில் அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும், ரித்விகா, வின்சு, அருள்தாஸ், சரண்யா ரவிச்சந்திரன் என பலரும் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், உமாதேவி, தனிகொடி, அறிவு உள்ளிட்டோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் வெள்ளிக்கிழமை (செப்.27, 2024) மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதனை இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அவர், “”காடுன்னா வெறும் மரம், செடி, கொடி மட்டும் கெடையாது” எனத் தெரிவித்துள்ளார்.
அதியன் ஆதிரை ஏற்கனவே 2019ஆம் ஆண்டு வெளியான இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற படத்தை இயக்கி இருந்தார். அட்டக்கத்தி தினேஷ் நடித்திருந்த இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரை எடுத்தாலும் வசூலில் தடுமாற்றத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ராகுல் காந்தியை சந்தித்த நடிகை மேகா ஆகாஷ்: காங்கிரஸில் இணைகிறாரா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com