Diwali train tickets: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது.
Diwali train tickets: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது.

Published on: September 3, 2026 at 6:52 pm
சென்னை செப். 3 2026; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே, டிக்கெட் முன்பதிவு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், பயணிகள் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
அதன்படி, தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் தொடங்கும். நவம்பர் 5-ஆம் தேதி பயணிக்க விரும்புவோர் செப்டம்பர் 6-ஆம் தேதியும், நவம்பர் 6-ஆம் தேதி பயணிக்க விரும்புவோர் செப்டம்பர் 7-ஆம் தேதியும், நவம்பர் 7-ஆம் தேதி பயணிக்க விரும்புவோர் செப்டம்பர் 8-ஆம் தேதியும், நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி நாளில் பயணிக்க விரும்புவோர் செப்டம்பர் 9-ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.
டிக்கெட் முன்பதிவுகள் தினமும் காலை 8 மணிக்கு தொடங்கும். பயணிகள் IRCTC இணையதளம் மூலமாகவோ அல்லது ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுண்டர்களிலோ டிக்கெட்டுகளைப் பெறலாம். இந்த முன்பதிவு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும். ரயில்வே விதிகளின்படி, 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.
வெளியூரில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாடுவதற்காக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதற்கான டிக்கெட் முன்பதிவு தேதிகளையும் தெற்கு ரயில்வே தனியாக அறிவிக்கவுள்ளது.
மேலும், டிக்கெட் முன்பதிவு தொடர்பான உதவிக்கு 24×7 இயங்கும் 139 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்கலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் மூலம், பயணிகள் தங்களது சந்தேகங்களைத் தீர்த்து, முன்பதிவை எளிதாக மேற்கொள்ள முடியும்.
இதையும் படிங்க; “இந்தியா கூட்டணியின் ஒரே பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி” .. வைகோ அதிரடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com