சென்னை, செப்.1 2026: நடிகர் அஜித்தின் 64-வது படமாக உருவாகும் ‘டேர் டெவில்’ படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி, பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்.
இதனிடையே, ‘டேர் டெவில்’ படத்தில் ஷாலினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் பரவி வந்தன. குறிப்பாக, அஜித் – ஷாலினி ஜோடி ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் திரையில் தோன்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் ஷாலினியை சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைக்க பரிசீலித்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ‘டேர் டெவில்’ படத்தில் ஷாலினி நடிக்கவில்லை. மீண்டும் திரையில் தோன்றும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், திரைத்துறையில் இனி பின்னணியில் இருந்து பணியாற்றுவதையே விரும்புவதாகவும் ஷாலினி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அஜித் – ஷாலினி மீண்டும் இணைந்து நடிப்பார்கள் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ‘டேர் டெவில்’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 2026-ல் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் கதை மற்றும் பிற நடிகர்கள் குறித்த பல்வேறு தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால், ஷாலினி தயாரிப்பாளராக அறிமுகமாகும் இந்தப் படம், அஜித் ரசிகர்களிடையே தொடர்ந்து கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: நேபாள வெள்ள காட்சிகள், ‘காண முடியாத வேதனை’.. அமிதாப் பச்சன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்