CWG Bronze: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் டெகாத்லான் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்த தேஜஸ்வின் சங்கருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
CWG Bronze: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் டெகாத்லான் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்த தேஜஸ்வின் சங்கருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Published on: August 1, 2026 at 4:03 pm
புதுடெல்லி, ஆகஸ்ட் 1, 2026: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் டெகாத்லான் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய தடகள வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டிய தேஜஸ்வின் சங்கருக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்காக காமன்வெல்த் போட்டியின் டெகாத்லான் பிரிவில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதாகவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தேஜஸ்வின் சங்கரின் இந்த சாதனையை இந்திய தடகள வரலாற்றின் முக்கிய தருணமாக திரௌபதி முர்மு பாராட்டினார். எதிர்காலத்திலும் அவர் மேலும் பல உயரங்களை எட்டி, நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
Indian athletes continue to create history and make our nation proud!
— Narendra Modi (@narendramodi) August 1, 2026
Tejaswin Shankar wins a Bronze in the Men's Decathlon event at the Glasgow CWG. He delivered an exceptional all-round performance across 10 events. Congrats to him. May he continue to shine. My best wishes.… pic.twitter.com/nUnRVxQbAy
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடியும் தேஜஸ்வின் சங்கருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். டெகாத்லான் போட்டியின் 10 பிரிவுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெண்கலப் பதக்கம் வென்றதற்காக அவர் வீரரை பாராட்டினார்.
வரலாற்றுச் சாதனையைப் படைத்த தேஜஸ்வின் சங்கருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் மோடி, வரும் ஆண்டுகளிலும் அவர் தொடர்ந்து வெற்றிகளை குவித்து இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று தனது வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஒரே நாளில் 2 வரலாற்று தங்கம்… காமன்வெல்த் போட்டியில் இந்தியா மிரட்டல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com