ஜெருசலேமில் இந்தியர் கொலை? 31 வயது இளைஞர் கைது!

Jerusalem Murder Case: ஜெருசலேமில் இந்தியர் மர்ம மரணம் விவகாரத்தில், சந்தேகத்தின் அடிப்படையில் 31 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published on: July 24, 2026 at 2:58 pm

ஜெருசலேம், ஜூலை 24, 2026: ஜெருசலேமில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 31 வயதுடைய இஸ்ரேலியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜெருசலேமின் கட்டமோன் பகுதியில் 40 வயதுடைய இந்தியர் ஒருவர் வியாழக்கிழமை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் வீட்டின் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் காவல்துறையின் தகவலின்படி, மோரியா காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட ஆய்வில் இது குற்றச்செயலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட ஐலாட் நகரைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஒருவர் விரைவாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட இந்தியத் தொழிலாளியின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. ஜெருசலேம் மாவட்டக் கமாண்டர் அவ்சலோம் பெலெட் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தார். பின்னர், விசாரணையைத் தொடருமாறு உத்தரவிட்டு, வழக்கை ஜெருசலேம் மாவட்ட மத்தியப் பிரிவிடம் ஒப்படைத்தார்.

மோரியா காவல் நிலையத்தின் கமாண்டரான தலைமை ஆய்வாளர் யுவால் ரூவன், “ஜெருசலேம் மாவட்டத்தில் உள்ள மோரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் ஒருவர் அதிக அளவிலான ரத்தத்துடன் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. விசாரணையின்போது, இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கண்டறியப்பட்டார்,” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பிரான்சில் காட்டுத்தீயால் பரபரப்பு… 20,000-க்கும் மேற்பட்டோர் அவசரமாக வெளியேற்றம்!

“எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடரும் வரை ஒத்துழைப்பு இல்லை”… ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!
India vs Pakistan

“எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடரும் வரை ஒத்துழைப்பு இல்லை”… ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா

‘டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்துக்கு எந்த மதிப்பும் இல்லை’.. வளைகுடா நாடுகளை தாக்கத் தொடங்கிய ஈரான்!
Donald Trump

‘டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்துக்கு எந்த மதிப்பும் இல்லை’.. வளைகுடா நாடுகளை தாக்கத் தொடங்கிய

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com