நடிகர் கார்த்தி பகிரங்க மன்னிப்பு: பவன் கல்யாண் பதில் தெரியுமா?

திருப்பதி லட்டு குறித்து பேசிய விவகாரத்தில் நடிகர் கார்த்தி, ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Published on: September 24, 2024 at 9:04 pm

Actor Karthi apologized to Pawan Kalyan | திருப்பதி லட்டு குறித்த கருத்துக்கு நடிகர் கார்த்தி, நடிகர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து ட்விட்டரில், “வெங்கடேசப் பெருமானின் தாழ்மையான பக்தன்” எனவும் தெரிவித்துள்ளார். சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள படம் மெய்யழகன்.
இந்தப் படத்தின் புரமோஷன் விழா ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது நடிகர் கார்த்தியிடம் திருப்பதி லட்டு குறித்து கேட்கப்பட்டது. இந்தக் கேள்விகளுக்கு அவர் சிரித்துக் கொண்டே, “லட்டு வேண்டாம்” எனப் பதிலளித்தார்.

நடிகர் கார்த்தியின் இந்தப் பதில் சர்ச்சையானது. இந்த நிலையில் திருப்பதி லட்டு என்றால் உங்களுக்கு நகைச்சுவையா? நீங்கள் நடிகராக இருக்கலாம். ஆனால் சனாதன தர்மத்தை மதிக்க வேண்டும்” என ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் எச்சரித்தார்.

இந்த நிலையில் ட்விட்டரில் நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரியுள்ளார். அதில், “அன்பார்ந்த பவன் கல்யாண் சார். நான் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். எதிர்பாராத தவறான புரிதல் ஏற்பட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

வெங்கடேசப் பெருமானின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை அன்புடன் நடத்துகிறேன். வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தியின் மெய்யழகன் படம் தெலுங்கில் சத்யம் சுந்தரம் என்ற பெயரில் செப்.27ஆம் தேதி வெளியாகிறது.

பவன் கல்யாண் பாராட்டு

இந்த நிலையில் நடிகர் கார்த்திக்கு பவன் கல்யாண் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அவர், “உங்கள் அன்பான சைகையையும் விரைவான பதிலையும், எங்கள் பகிரப்பட்ட மரபுகளுக்கு நீங்கள் காட்டிய மரியாதையையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

திருப்பதி மற்றும் லட்டு போன்ற பிரசாதங்கள் நமது புனிதம் பற்றிய விஷயங்கள். மேலும், இதுபோன்ற தலைப்புகளை நாம் அனைவரும் கவனமாகக் கையாள வேண்டியது அவசியம். எந்த நோக்கமும் இல்லாமல் இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்பினேன்,

மேலும் நிலைமை தற்செயலாக இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். பொது நபர்களாகிய நமது பொறுப்பு, ஒற்றுமை மற்றும் மரியாதையை வளர்ப்பதாகும், குறிப்பாக நாம் மிகவும் மதிக்கும் நமது கலாச்சாரம் மற்றும் ஆன்மீக விழுமியங்கள் விஷயத்தில் இதனை கடைப்பிடித்தல் வேண்டும்.

சினிமா மூலம் தொடர்ந்து ஊக்கமளிக்கும் அதே வேளையில் இந்த விழுமியங்களை உயர்த்த எப்போதும் பாடுபடுவோம். அர்ப்பணிப்பும் திறமையும் தொடர்ந்து நம் சினிமாவை வளப்படுத்திய ஒரு குறிப்பிடத்தக்க நடிகராக உங்கள் மீது எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : திருப்பதி லட்டு சர்ச்சை: 11 நாள் பிராயச்சித்த தீக்ஷையை தொடங்கிய பவன் கல்யாண்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com