Gold Rate today : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 23) சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹1,08,000-ஐ எட்டியுள்ளது. அதேவேளையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராமுக்கு ₹245-க்கு விற்பனையாகிறது.
Gold Rate today : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 23) சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹1,08,000-ஐ எட்டியுள்ளது. அதேவேளையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராமுக்கு ₹245-க்கு விற்பனையாகிறது.

Published on: July 23, 2026 at 1:48 pm
சென்னை, ஜூலை 23 2026: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 23) சவரனுக்கு ₹560 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹1,08,000 ஆகவும், கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹13,500 ஆகவும் விற்பனையாகிறது. நேற்று (ஜூலை 22) ஒரு சவரன் தங்கம் ₹1,07,440-க்கும், ஒரு கிராம் ₹13,430-க்கும் விற்பனையானது.
கடந்த ஆண்டின் இதே நாளுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 2025 ஜூலை 23 அன்று ஒரு சவரன் தங்கம் ₹75,040-க்கும் (கிராம் ₹9,380), இன்று 2026 ஜூலை 23 அன்று ₹1,08,000-க்கும் (கிராம் ₹13,500) விற்பனையாகிறது. அதாவது, கடந்த ஒரு ஆண்டில் சவரனுக்கு ₹32,960 அல்லது சுமார் 43.92% உயர்வு பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டுவருகிறது. ஜூலை 17 அன்று சவரன் ₹1,04,800 ஆக இருந்த நிலையில், ஜூலை 18-ல் ₹1,05,080, ஜூலை 20-ல் ₹1,05,200, ஜூலை 21-ல் ₹1,05,360, ஜூலை 22-ல் ₹1,07,440 ஆக உயர்ந்து, இன்று ₹1,08,000 என்ற புதிய அளவை எட்டியுள்ளது.
இதேபோல், வெள்ளி விலையும் அண்மைய நாட்களில் உயர்ந்த நிலையில் தற்போது கிராமுக்கு ₹245 என்ற விலையில் நிலைத்திருக்கிறது. வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ₹245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹2,45,000-க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க: நிலுவையில் உள்ள சிக்கல்கள் தீர்வு.. EPFO ’விஸ்வாஸ் 2026′ அறிமுகம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com