தங்கம், வெள்ளி விலை ஜெட் வேகத்தில் உயர்வு… இன்றைய நிலவரம்!

Gold Price Today : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,07,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Published on: July 22, 2026 at 11:25 am

சென்னை, ஜூலை 22 2026: சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.13,150-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,200-க்கும் விற்பனையானது. நேற்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,220-க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1,05,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் மேலும் கடுமையான உயர்வு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.210 அதிகரித்து ரூ.13,430-ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,07,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியான விலை உயர்வால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையில், வெள்ளி விலையும் இன்று உயர்வை பதிவு செய்துள்ளது.

வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்றம் காணும் நிலையில், சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் முதலீட்டாளர்களின் தேவை அடுத்தகட்ட விலை மாற்றத்தை நிர்ணயிக்கும் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க பங்குச் சந்தை நீண்டகால முதலீடு வரி ரத்து செய்யப்படுமா? மத்திய அரசு பதில்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com