Fixed deposit | குறுகிய கால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு உயர் வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
Fixed deposit | குறுகிய கால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு உயர் வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
Published on: September 21, 2024 at 11:11 am
Fixed deposit | இந்தியா போன்ற வளரும் நாடுகளில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை எதிர்பார்க்கின்றனர். இவர்களின் முதல் தேர்வாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் உள்ளன. அந்த வகையில், குறுகிய கால முதலீடுகளுக்கு பெஸ்ட் ரிட்டன் கொடுக்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம். இதில் முதலிடத்தில் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியான ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி உள்ளது.
ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள்
இந்த வங்கியில் 180 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 6.75 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. தொடர்ந்து, உஜ்ஜீவன் வங்கி 4.75 சதவீதமும், உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 5.50 சதவீதமும் வட்டி வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ரூ.3 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு வழங்கப்படுகி்ன்றன.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 7 நாள்கள் முதல் 180 நாள்கள் வரையிலான முதலீட்டுக்கு 5.50 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. தொடர்ந்து, ஹெச்.டி.எஃப்.சி வங்கி 4.50 சதவீதமும், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 4.75 சதவீதமும் வட்டி வழங்குகின்றன.
இதையும் படிங்க : ₹.5 லட்சம் முதலீடு, ₹.10 லட்சம் ரிட்டன்: இந்த போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் ஏன் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com