₹1,020 கோடி முறைகேடு.. சிக்கலில் கே.என்.நேரு.. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

KN Nehru : முன்னாள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Published on: June 5, 2026 at 6:06 pm

Updated on: June 5, 2026 at 6:11 pm

சென்னை, ஜுன் 5 2026: தமிழக முன்னாள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (MAWS) அமைச்சரான கே.என். நேரு மீது ஆட்சேர்ப்பு மற்றும் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது.

அமலாக்கத்துறை (ED) ஏற்கனவே நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்ற நியமனங்கள் மற்றும் டெண்டர் ஒதுக்கீடுகளில் சுமார் ₹1,020 கோடி அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டியிருந்தது.

மேலும், நகராட்சி நிர்வாகத் துறையில் மட்டும் 2,538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனத்திற்காக ₹634 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும், இதுதொடர்பான ஆதாரங்களை தமிழக அரசிடம் ED சமர்ப்பித்துள்ளது.

கே.என். நேரு மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாநில அரசிடம் குற்றவியல் வழக்கு பதிவு செய்ய இரண்டு முறை அதிகாரப்பூர்வமாக பரிந்துரை செய்திருந்தது. இருப்பினும், திமுக ஆட்சி காலத்தில் அமலாக்கத்துறை பரிந்துரைத்த போதிலும் கே.என். நேரு மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, லஞச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் உத்தரவின் பேரில், அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு கே.என். நேரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிவிஏசி குற்றவியல் நடவடிக்கையை தொடங்கியுள்ள நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) தொடர்பான பிரிவுகளின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க புதிய அரசியல் கட்சி…அண்ணாமலை அதிரடி.. பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அறிவிப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com