Delhi hotel fire accident : டெல்லியில் நிகழ்ந்த தீ விபத்தில் 21 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Delhi hotel fire accident : டெல்லியில் நிகழ்ந்த தீ விபத்தில் 21 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published on: June 4, 2026 at 2:23 pm
புதுடெல்லி, ஜூன் 4, 2026: டெல்லி மல்வியா நகர் பகுதியில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 12 வெளிநாட்டு குடிமக்களும் அடங்குவர். ஹோட்டல் உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் கைது செய்யப்பட்டு, தீ பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ன நடந்தது?
தீ விபத்து ஜூன் 3, 2026 காலை 8.50 மணியளவில் ஏற்பட்டது. ஹோட்டலில் ஒரே ஒரு நுழைவு-வெளியேறும் வழி மட்டுமே இருந்ததால், பலர் சிக்கிக் கொண்டனர். தீ விபத்தில் சிக்கியவர்களில் 49 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், இதில் 21 பேர் உயிரிழந்தனர். 8 பேர் சிகிச்சை முடிந்து வெளியேற்றப்பட்டனர்.
பாதுகாப்பு குறைபாடுகள்
இதற்கிடையில், ஹோட்டலுக்கு தீ பாதுகாப்பு குறித்த உபகரணங்கள் பெரிதளவில் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 25 அறைகள் இயக்கப்பட்டிருந்தாலும், அதிகாரப்பூர்வ அனுமதி 6 அறைகளுக்கே வழங்கப்பட்டிருந்தது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால் புகை வெளியேற முடியாமல், கட்டிடம் மரண வலையாக மாறியது என அறிக்கைகள் கூறுகின்றன.
இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 9 இந்தியர்கள் மற்றும் 12 வெளிநாட்டவர்கள் அடங்குவர். இந்நிலையில், ஹோட்டல் உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் குற்றப்பத்திரிகை பதிவு செய்து, கட்டிட விதிமீறல்கள், தீ பாதுகாப்பு குறைபாடுகள், மற்றும் அலட்சியம் காரணமாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க : தீ பற்றி எரிந்த ஹோட்டல்.. மகனை மார்போடு அணைத்தபடி குதித்த பெண்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com