Tamil Nadu | சென்னை – மும்பை செல்லும் விமானம் புறப்படும் நேரத்தில் எமர்ஜென்சி கதவை பயணி ஒருவர் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Tamil Nadu | சென்னை – மும்பை செல்லும் விமானம் புறப்படும் நேரத்தில் எமர்ஜென்சி கதவை பயணி ஒருவர் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on: September 20, 2024 at 11:50 am
Updated on: September 20, 2024 at 11:59 am
Tamil Nadu | சென்னை – மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்படும் நேரத்தில் எமர்ஜென்சி கதவை திறந்த பயணி கைது செய்யப்பட்டார்.
சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு 10.30 மணிக்கு புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில் 152 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தின் உள்ளே அவசர கதவு அலாரம் அடித்து. உடனடியாக விமானி ஓடுபாதையில் விமானத்தை நிறுத்தினார்.
மும்பையைச் சேர்ந்த வருண் பாரத் என்ற பயணி, தவறுதலாக எமர்ஜென்சி டோர் பட்டனை அழுத்தியதாகக் கூறினார். ஆனால் விமானி விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து, விமான பாதுகாப்பு அதிகாரிகள் வருணை விசாரிக்க வந்தனர்.
தொடர்ந்து, விமானப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக வருண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சென்னை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனால், விமான நிலையத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
தொடர்ந்து இரண்டு மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னையில் இருந்து மும்பைக்கு விமானம் புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதியுற்றனர். விமான எமர்ஜென்சி கதவை திறந்த பயணியிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க : தூத்துக்குடியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிபோல் வேடமணிந்து ஏமாற்றிய பெண் கைது
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com