Hantavirus : தாய்லாந்து அரசு ஹான்டா வைரஸை ‘ஆபத்தான தொற்றுநோய்’ என அறிவித்துள்ளது.
Hantavirus : தாய்லாந்து அரசு ஹான்டா வைரஸை ‘ஆபத்தான தொற்றுநோய்’ என அறிவித்துள்ளது.

Published on: May 16, 2026 at 4:24 pm
பாங்காக், மே 16, 2026 : தாய்லாந்து அரசு ஹான்டா வைரஸை ஆபத்தான தொற்றுநோய் என அறிவித்து, அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு 42 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சந்தேகிக்கப்படும் நோயாளிகள் 3 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் 12 மணி நேரத்திற்குள் விசாரணை தொடங்கப்பட வேண்டும் என புதிய விதிமுறைகள் கூறுகின்றன.
முன்னதாக, மே 15, 2026 அன்று தாய்லாந்தின் தேசிய தொற்றுநோய் குழு ஹான்டா வைரஸை ஆபத்தான தொற்றுநோயாக அறிவித்தது. இதன் மூலம், தொற்றுப் பரவல் 2015 சட்டத்தின் கீழ், அதிகாரிகள் தனிமைப்படுத்தல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், ஹான்டா வைரஸ் தற்போது தாய்லாந்தின் 14வது ஆபத்தான தொற்றுநோயாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அதிக ஆபத்து உள்ள தொடர்புகள் 42 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சந்தேகிக்கப்படும் நோயாளிகள் 3 மணி நேரத்திற்குள் அதிகாரிகளிடம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் 12 மணி நேரத்திற்குள் நோய் விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹான்டா வைரஸ், எலி மற்றும் பிற கீரிகள் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட எலிகளின் மூத்திரம், உமிழ்நீர், மல ஆகியவற்றின் தொடர்பு மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. மேலும், இது தாக்கினால் காய்ச்சல், தலைவலி, தசை வலி, சோர்வு, வயிற்று வலி, வாந்தி, சுவாசக் கோளாறு. கடுமையான நிலைகளில் சிறுநீரக செயலிழப்பு, நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க : காங்கோ நாட்டில் புதிய எபோலா பரவல் உறுதி.. உலக நாடுகள் அதிர்ச்சி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com