மகளுக்கு பாலியல் வன்கொடுமை.. மரண தண்டனை ரத்து.. ஆனால்.. மதுரை ஐகோர்ட்!

POCSO law implications : மகளுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த தந்தைக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட நிலையில், அவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Published on: May 16, 2026 at 2:48 pm

மதுரை, மே 16, 2026: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, தனது மகளை பலமுறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தது. மேலும், இந்தத் தண்டனையை வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனையாக மாற்றியுள்ளது.

வழக்கின் பின்னணி

இந்த வழக்கில், குற்றவாளி, 2024 ஆகஸ்ட் மாதம் தனது 13 வயது மகளை, குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது, மதுவில் மயங்கி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார். அதே மாதத்தில் மீண்டும் பாலியல் தாக்குதல் நடத்தியதால், சிறுமி கர்ப்பமாகினார். இந்த நிலையில், சிறுமி தனது தாயிடம் உண்மையை வெளிப்படுத்தியதும், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையில் சிறுமிக்கு பிறந்த குழந்தை, உடல் நலப் பிரச்னைகளால் மரணித்தது. இந்த நிலையில், திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றம் 2025 டிசம்பரில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தது.

இந்த நிலையில், குற்றவாளி, தன்னை தவறாக சிக்கவைத்ததாகக் கூறி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டபோது, நீதிபதிகள் ஜி.கே இலந்திரையன் மற்றும் ஆர். பூர்ணிமா மரண தண்டனையை ரத்து செய்து, வாழ்நாள் சிறைத்தண்டனையாக மாற்றினர்.

நீதிமன்றம் கண்டிப்பு

மேலும், நீதிபதிகள் இதனை கண்டித்தனர். இத குறித்து நீதிபதிகள், தந்தை தனது மகளுக்கு எதிராக இத்தகைய குற்றம் புரிந்தது மிகவும் அருவருப்பானது என நீதிமன்றம் கண்டித்தது.

ஆனால், மரண தண்டனை ‘அரிதான வழக்குகளில்’ மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், இவ்வழக்கில் வாழ்நாள் சிறைத்தண்டனை போதுமானது என தீர்மானிக்கப்பட்டது” என நீதிபதிகள் கூறினார்கள். மேலும், குற்றவாளி சிறையில் சம்பாதிக்கும் சம்பளம், சிறுமியின் பெயரில் வங்கி கணக்கில் செலுத்தப்பட வேண்டும் என்றும், அவளின் கல்விச்செலவுகளை அரசு ஏற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க : ஈரோட்டில் கிரேனில் இருந்து ரெயில் எஞ்சின் பெட்டி விழுந்து விபத்து!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com