Congo: காங்கோ நாட்டில் புதிய எபோலா பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது; உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Congo: காங்கோ நாட்டில் புதிய எபோலா பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது; உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Published on: May 15, 2026 at 7:19 pm
காங்கோ, மே 15, 2026: காங்கோ நாட்டின் இடூரி மாகாணத்தில் புதிய எபோலா பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 65 மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த பரவல், ஆப்ரிக்காவின் சுகாதார அமைப்புகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையில், மொத்தம் 246 பேர் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஆரம்ப பரிசோதனைகள், எபோலா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் எனக் காட்டுகின்றன.
இந்த நிலையில், வைரஸ்களின் நடைபெற்று வருகிறது; சரியான வகை விரைவில் உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த வைரஸ்கள் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பரவக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், சுரங்கத் தொழிலாளர்கள், எல்லை கடத்தல், பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக நோய் விரைவில் பரவக்கூடும் என்றும் உகாண்டா, தென் சூடான் எல்லைகளுக்கு அருகில் இருப்பதால், பிராந்திய பரவல் அபாயம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எபோலா பரவல் காங்கோவின் 17வது பரவல் ஆகும். கடந்த 2018–2020 பரவலில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை நினைவில் கொண்டால், தற்போதைய நிலை மிகுந்த கவலைக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அமெரிக்காவில் பெண் ஊழியர் மீது பாலியல் புகார்: பாதிக்கப்பட்டவர் இந்தியர் அல்ல!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com