IPL 2026 Captains Under Fire: நடப்பு ஐ.பி.எல் தொடரில் 3 அணி கேப்டன்கள் பதவி பறிபோகும் அபாயத்தில் உள்ளனர்.
IPL 2026 Captains Under Fire: நடப்பு ஐ.பி.எல் தொடரில் 3 அணி கேப்டன்கள் பதவி பறிபோகும் அபாயத்தில் உள்ளனர்.

Published on: May 14, 2026 at 6:29 pm
சென்னை, மே 14, 2026: ஐ.பி.எல் 2026-இல் மூன்று அணிகளின் கேப்டன்கள் மோசமான பிரயாணத்தால் தங்கள் தலைமைப் பொறுப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். அவர்கள் அக்ஷர் படேல் (டெல்லி கேப்பிட்டல்ஸ்) , அஜிங்க்யா ரஹானே (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), ரிஷப் பந்த் ( லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்) ஆகியோர் ஆவார்கள்.
இவர்கள், இந்த பிளேஆஃப் வாய்ப்புகளை தொடர்ந்து இரண்டு சீசன்களாக இழந்ததால், அடுத்த சீசனில் கேப்டன்சியில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்ஷர் படேல்
இவர்களில், 9 இன்னிங்ஸ்களில் 100 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும், பந்துவீச்சில் 12 போட்டிகளில் 36 ஓவர்கள் மட்டுமே வீசி, 10 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இவரின் தலைமைத் திறன் குறைவு மற்றும் தவறான அணித் தேர்வுகள் காரணமாக, அடுத்த சீசனில் கேப்டன்சியை இழக்க வாய்ப்பு அதிகம்.
அஜிங்க்யா ரஹானே
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ந்து பிளேஆஃப் வாய்ப்புகளை இழந்தது. இதற்கிடையில், ரஹானேவின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷி முடிவுகள் விமர்சிக்கப்பட்டுள்ளன. இதனால், அடுத்த ஏலத்தில் அவரை கேப்டனாக வைத்துக்கொள்ள வாய்ப்பு குறைவு எனக் கூறப்படுகிறது.
ரிஷப் பந்த்
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் முதலில், ஐ.பி.எல் 2026-இல் பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட அணியாக திகழ்கிறது. இதற்கிடையில், ரிஷப் பந்த் பேட்ஸ்மேன் ஆக தொடர வாய்ப்புகள் இருந்தாலும், கேப்டன்ஷியை இழக்கும் அபாயம் மிகுந்துள்ளது.
இதையும் படிங்க: IPL 2026: வரலாற்று சாதனை நிகழ்த்திய விராட்கோலி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com