ஓசூரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. பால் வியாபாரி கைது!

Hosur: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குற்றத்தில் பால் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

Published on: April 28, 2026 at 2:01 pm

ஓசூர், ஏப்.28, 2026: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது திருமணமான பெண் ஒருவர் வேலைக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வந்தார். அங்கு தற்காலிகமாக தங்கி பணியாற்றிய அவர், தொலைபேசி வசதி இல்லாததால் பால் வியாபாரி மகேஷிடம் (37) உதவி கேட்டார்.

மகேஷ், அவரை தொடர்பு கொள்ள வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் பெயரில் டூவீலரில் ஏற்றி, ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மகேஷை கைது செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் போலீசார் மகேஷை கைது செய்தனர். இந்தச் சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : 2027ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்.. விண்ணப்பங்கள் வரவேற்பு.. முழு விவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com