Madras High Court: உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 23 நீதிபதிகள் பணியிடங்களை சமூகநீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று வழக்கறிஞர்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
Madras High Court: உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 23 நீதிபதிகள் பணியிடங்களை சமூகநீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று வழக்கறிஞர்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

Published on: April 28, 2026 at 10:24 am
சென்னை, ஏப்.28, 2026: உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 23 நீதிபதிகள் பணியிடங்களை சமூகநீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று வழக்கறிஞர்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக, வழக்கறிஞர்கள் கூறுகையில், “நீதித்துறையில் சமூகநீதி உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக, உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 23 நீதிபதிகள் பணியிடங்கள், சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும் வகையில் நிரப்பப்பட வேண்டும். இதன் மூலம் நீதித்துறையில் சமநிலை ஏற்படும்.
அவர்கள் மேலும் குறிப்பிட்டதாவது, சமூகநீதி அடிப்படையில் நியமனங்கள் செய்யப்படாவிட்டால், நீதித்துறையில் பின்தங்கிய சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காது. இது நீதித்துறையின் நம்பகத்தன்மையை பாதிக்கும் அபாயம் உள்ளது“ எனத் தெரிவித்தனர்.
மேலும், “ஜனநாயகத்தின் அடி நாதமாக உள்ளது நீதித்துறை. இந்தியா முழுவதும் 1110 நீதிபதிகள் உள்ள நிலையில், 300 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது” எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க :3 முதல் 8ஆம் வகுப்பு வரை AI பாடம் அறிமுகம்.. மத்திய அரசு அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com