Polladha Asaigal Song : பிரபல டைரக்டர் ரத்ன குமாரின் 29 படத்தின் “பொல்லாத ஆசைகள்” பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Polladha Asaigal Song : பிரபல டைரக்டர் ரத்ன குமாரின் 29 படத்தின் “பொல்லாத ஆசைகள்” பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: April 26, 2026 at 12:32 pm
சென்னை, ஏப்.26, 2026: டைரக்டர் ரத்ன குமாரின் வரவிருக்கும் தமிழ் திரைப்படமான 29 படத்தின் நான்காவது சிங்கிள் பாடல் “பொல்லாத ஆசைகள்” ஏப்ரல் 27, 2026 அன்று வெளியிடப்படுகிறது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை சத்யபிரகாஷ் மற்றும் சைந்தவி பாடியுள்ளனர். பாடல் வரிகளை உமா தேவி எழுதியுள்ள நிலையில், லீலாவதி குமார் நடன அமைப்பை உருவாக்கியுள்ளார்.
‘Polladha Aasaigal…’ 4th single from #29theFilm releasing this Monday.
— Karthik Ravivarma (@Karthikravivarm) April 25, 2026
Sean Roldan 🎶
Film in theatres May 8 pic.twitter.com/VxC9hUxLCL
டைரக்டர் ரத்ன குமாரின் 29 படத்துக்கு, சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும், இந்த பாடல், படத்தின் வெளியீட்டுக்கு முன் ரசிகர்களிடையே ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பாடல் ஏப்ரல் 27, 2026 அன்று வெளியாகவுள்ள நிலையில், மே 8, 2026 அன்று படம் வெளியாகிறது.
இயக்குனர் ரத்ன குமார் – தமிழ் சினிமா பயணம்
2017-ம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் ரத்ன குமார். பின்னர் அவர் ‘ஆடை’, ‘குலுகுலு’ போன்ற படங்களை இயக்கி பாராட்டைப் பெற்றார்.
மேலும், ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார். தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் சமூக கருத்துகளை இணைக்கும் திறமையால் ரத்ன குமார் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 29 வயதில் ஹார்ட் அட்டாக்.. யார் இந்த ஹரியான்வி நடிகை திவ்யங்கா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com