வருமான வரி சோதனை சோதனை.. சிக்கலில் செல்வபெருந்தகை.. போலீசில் புகார்!

Selvaperundhagai house raid row: வருமான வரித்துறை ரெய்டு புகார் கூறிய செல்வபெருந்தகைக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Published on: April 22, 2026 at 12:20 pm

சென்னை, ஏப்.22, 2026: தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை வருமான வரித்துறை அதிகாரிகள் மீது வாய்மொழி புகாரை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். அந்தப் புகாரில், கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்கிறார்; இந்தப் பரப்புரைக்கு செல்ல முடியாதபடி நான் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளேன்.

வருமான அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள்; இந்தி பேசும் அதிகாரிகளால் பாதிக்கப்பட்டுள்ளேன் எனத் தெரிவித்து இருந்தார். இது தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் ஒன்று வெளியானது. அதில், “செல்வபெருந்தகை கூறியது போல் எவ்வித சோதனையும் நடக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க : தொகுதி மறுவரையறைக்கு எதிரான முதல் குரல் மு.க ஸ்டாலின்.. மல்லிகார்ஜுன் கார்கே

போலீசில் புகார்

இந்த நிலையில், வருமான வரித்துறை தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அளித்துள்ளது.

சட்டமன்ற தேர்தல்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணிக்கை செய்யப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி, தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி, த.வெ.க மற்றும் நாம் தமிழர் தனித்துப் போட்டி என நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ரூ.7.36 கோடி முதலீடு மிஸ்ஸிங்.. உதயநிதிக்கு எதிராக வருமான வரித்துறை.. நீதிமன்றத்தில் பரபரப்பு!

தமிழ்நாட்டில் பாஜக வெல்லும்.. வானதி சீனிவாசனிடம் தோற்றவர் கமல்ஹாசன்.. பியூஸ் கோயல் அதிரடி பேட்டி
Piyush Goyal

தமிழ்நாட்டில் பாஜக வெல்லும்.. வானதி சீனிவாசனிடம் தோற்றவர் கமல்ஹாசன்.. பியூஸ் கோயல் அதிரடி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com