சினிமா பிரபலம் ஆக ஆசையா? பரத்தின் ரியாலிட்டி நிகழ்ச்சி.. பிக் ஃபிக்சர்ஸ் எப்படி?

Bharath Backs Big Pitchure : நடிகர் பரத் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார்.

Published on: April 21, 2026 at 2:46 pm

சென்னை, ஏப்.21, 2026: நடிகர் பரத் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், இது தொடர்பாக பேசிய அவர், “நான் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது இதுவே முதல் முறை. திரையுலகில் 23 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், இந்தத் துறைக்கு ஏதேனும் ஒன்றை நான் திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன்” என்றார்.

ரியாலிட்டி நிகழ்ச்சி ஏன்?

மேலும், ரியாலிட்டி நிகழ்ச்சி முயற்சி ஏன் என்பது குறித்து பேசிய அவர், “திரைத்துறைக்கு நான் ஒன்றை திருப்பிக் கொடுக்க விரும்பியதால், இதனை முயற்சிக்கிறேன்” என்றார்.
மேலும், “திரையுலகில் அடியெடுத்து வைக்கத் துடிக்கும் இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உதவவும் அவர்களை வளர்த்தெடுக்கவும் நான் விரும்பினேன்” என்றார்.

ரியாலிட்டி நிகழ்ச்சி

பிக் பிக்சர்ஸ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஒளிபரப்பாகிறது.

இது 15 வாரங்களுக்கு தொடர்ந்து நடத்தப்படும் நிகழ்ச்சி ஆகும். இதன் ஒவ்வொரு புதிய 60 நிமிட அத்தியாயமும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியாகும். இந்நிகழ்ச்சியின் தமிழ் வடிவத்தைத் நடிகர் பரத் தொகுத்து வழங்குகிறார்.

இது குறித்து பரத், “நாளைய இயக்குனர் இயக்குனர் தேடலுக்கு முக்கியத்துவம் அளித்தது; பிக் பிக்சர்ஸ் நிகழ்ச்சி, ரையுலகின் பல்வேறு பிற துறைகளைச் சார்ந்த திறமையாளர்களுக்கும் கைகொடுக்கிறது. எங்கள் நிகழ்ச்சியில் நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள், படத்தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், சண்டை இயக்குநர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் எனப் பலரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்” என்றார்.

இதையும் படிங்க: நிவின் பாலியின் அரசியல் படம்.. பிரதிச்சாயா OTT வெளியீடு.. எப்போது, எங்கு பார்க்கலாம்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com