Anbumani Ramadoss: தமிழ்நாட்டை தீமைகளிடமிருந்து மீட்டெடுப்பதற்கான சட்டப்பேரவைத் தேர்தல் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: தமிழ்நாட்டை தீமைகளிடமிருந்து மீட்டெடுப்பதற்கான சட்டப்பேரவைத் தேர்தல் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: April 21, 2026 at 11:45 am
சென்னை, ஏப்.21, 2026: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “இந்தத் தேர்தல் நீதிக்கும், அநீதிக்கும் இடையிலான போராகவே பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டை தீமைகளிடமிருந்து மீட்டெடுப்பதற்கான சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் ஏப்ரல் 23&ஆம் நாள் நடைபெறவிருக்கிறது.
இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற 16 சட்டப்பேரவைத் தேர்தல்களும் ஆட்சிக்கான உரிமையை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தல்கள் என்றால், இத்தேர்தல் அதையும் கடந்து ஐந்தாண்டுகளாக பீடித்திருந்த கிரகணத்திலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுப்பதற்கான தேர்தல் ஆகும். அதனால், இந்தத் தேர்தலில் வாக்காளர்களின் முக்கியத்துவமும், பொறுப்பும் அதிகரித்திருக்கிறது.
தேர்தல் என்றாலே அது தமிழ்நாட்டில் திருவிழாவாகத் தான் பார்க்கப்படும். ஆனால், இந்தத் தேர்தல் நீதிக்கும், அநீதிக்கும் இடையிலான போராகவே பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், தமிழக மக்களின் முன்னேற்றம், பாதுகாப்பு ஆகியவற்றையும் உறுதி செய்ய நாளை மறுநாள் ஏப்ரல் 23&ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க, அதிமுக, பாரதிய ஜனதா, அ.ம.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, புதியநீதிக் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு மாம்பழம், இரட்டை இலை, தாமரை, குக்கர் ஆகிய சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்; அதன்மூலம் தமிழகத்தில் தீய திமுக ஆட்சியை அகற்றி விட்டு, அதிமுகவின் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நான் கண்ட கனவு திட்டங்களை செயல்படுத்துகிறார்.. அன்பிலுக்கு வாக்கு கேட்ட கமல்ஹாசன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com