விஜய்- சங்கீதா ஆஜராக உத்தரவு.. குடும்ப நல நீதிமன்றம் அதிரடி!

Vijay Sangeetha divorce case: விவாகரத்து வழக்கில் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published on: April 20, 2026 at 1:04 pm

Updated on: April 20, 2026 at 1:43 pm

சென்னை, ஏப்ரல் 20, 2026: நடிகரும் தவெக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா பிப்.24ஆம் தேதி மனு அளித்திருந்தார். அந்த மனுவில், 2021 முதல் தாங்கள் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், நடிகர் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சசிகலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இருவரும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

விவாகரத்து வழக்கின் விசாரணைக்காக நடிகரும் தவெக தலைவருமான விஜய் காணொளி மூலம் ஆஜராக அனுமதி அளிக்கக் கோரி அவரது வழக்கறிஞர் குமரேசன் மனு அளித்தார். இந்நிலையில், விஜய்-சங்கீதா இருவரும் ஜூன் 15ல் காணொளி மூலம் ஆஜராக செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் சங்கீதாவும் நேரில் ஆஜராகாமல் காணொலிக் காட்சி வாயிலாக ஆஜராக மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குடும்பப் பிரச்சினை என்பதால், இது குறித்து ஊடகங்களில் விவாதிக்கவோ அல்லது செய்திகள் வெளியிடவோ தடை விதிக்கக்கோரியும் விஜய் தரப்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருவரும் பரஸ்பரம் பிரிந்துவிடுவது என சுமூக முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க வடவர் படையெடுப்பை முறியடிப்போம்.. செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கமல்ஹாசன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com