G V Prakash Kumar : இசையமைப்பாளர் நடிகர் என பன்முக திறமை கொண்ட ஜி.வி பிரகாஷ் குமார், தனது அடுத்த படத்தில் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார்.
G V Prakash Kumar : இசையமைப்பாளர் நடிகர் என பன்முக திறமை கொண்ட ஜி.வி பிரகாஷ் குமார், தனது அடுத்த படத்தில் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார்.

Published on: April 15, 2026 at 4:43 pm
சென்னை, ஏப்.15, 2026: ஜி.வி பிரகாஷ் குமார் தனது புதிய படத்தில், கிரிக்கெட் வீரராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், மாளவிகா மஜோஜ் நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
புதிய படத்தில் ஜி.வி பிரகாஷ் குமார்
"SOME INNINGS STARTS FROM HEART < EYES" – When magic meets love and comes straight from the ❤️ @hariharanram24’s next is a beautiful romantic tale featuring @gvprakash & @imalavikamanoj | Shot by @thenieswar | Music composed by @gvprakash pic.twitter.com/x92eXnrVyV
— Lark Studios (@larkstudios1) April 14, 2026
இந்தப் புதிய படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், நடிகை மாளவிகா மனோஜ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இப்படம் கிரிக்கெட் வீரர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது எனத் தெரிகிறது.
படத்தை ஜோ படத்தின் மூலமாக கவனம் பெற்ற இயக்குனர் ஹரிஹரன் இயக்குகிறார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் அண்மையில் ஹேப்பி ராஜ் என்ற படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ.112 கோடி நஷ்டஈடு கோரி நோட்டீஸ்.. விக்னேஷ் சிவனுக்கு அனுப்பிய எல்.ஐ.சி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com