இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு.. முக்கிய பங்குகள் தடுமாற்றம்!

Share Market Today: இந்தியப் பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை காலை (மார்ச் 23, 2026) வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின.

Published on: March 23, 2026 at 10:54 am

மும்பை, மார்ச் 23, 2026: இன்றைய பங்குச் சந்தைகள் சென்செக்ஸ் மேலும் சரிந்தன. நிஃப்டி 8 மாதக் குறைந்த நிலைக்கு 22,700-க்கு கீழே சரிந்தது; சென்செக்ஸ் 1,750 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. எனினும், வி.ஐ.எக்ஸ் 11% உயர்வு கண்டது.

பங்கு சந்தை நிலவரம்

இந்நிலையில், இந்திய பங்குச் சந்தை நிலை விற்பனையாளர்களின் பக்கம் சாய்ந்துள்ளது. சிறு மற்றும் நடுத்தர அளவிலான பங்குகள் அதிகளவில் விற்பனை அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. முக்கிய குறியீடுகள் 2% க்கும் மேல் சரிந்துள்ளன. நிஃப்டி வங்கி குறியீடும் 2% க்கும் மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. விற்பனை அழுத்தம் மிகக் கடுமையாக இருந்ததால், 50 பங்குகளில் 2 பங்குகள் மட்டுமே உயர்வில் இருந்தன.

நிஃப்டி 50 முக்கிய இழப்பாளர்கள்

  • டாடா ஸ்டீல்
  • ஹிந்தால்கோ இண்டஸ்ட்ரீஸ்
  • ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்
  • இந்திய ஸ்டேட் வங்கி
  • ஜியோ ஃபைனான்ஷியல் சர்வீசஸ்

திங்கட்கிழமை காலை ஆரம்ப வர்த்தக நேரங்களில், கச்சா எண்ணெய் விலை பெரும்பாலும் நிலைத்திருந்தது. பிரெண்ட் க்ரூட் 0.66% குறைந்து, ஒரு பீப்பாய்க்கு $111.45 ஆக இருந்தது.
அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) 0.08% குறைந்து, ஒரு பீப்பாய்க்கு $98.16 ஆக இருந்தது.

வேதாந்தா பங்குகள்

மேலும், இன்றைய காலை ஆரம்ப வர்த்தகத்தில், வேதாந்தா பங்குகள் சுமார் 5% சரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 1 முதல் 5 ஆண்டு கால எஃப்.டி முதலீடு.. எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com