நெப்போலியன் கேரக்டரில் ரகுவரன்.. ஆர்யாவுக்கு பதில் அஜித்.. வட்டாரம் சீக்ரெட்!

Ajith Kumar: வட்டாரம் திரைப்படத்தை பார்த்துவிட்டு இது நான் நடிக்க வேண்டிய படம் என இயக்குனர் சரணிடம் அஜித் குமார் கூறியுள்ளார்.

Published on: March 21, 2026 at 5:05 pm

Updated on: March 21, 2026 at 5:13 pm

சென்னை மார்ச் 21 2026; இயக்குனர் சரணின் படங்களிலேயே மாறுபட்ட கதையம்சம் கொண்டது வட்டாரம்; இந்த படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடித்திருப்பார். கதாநாயகனுக்கு ஈடான ஒரு வில்லன் கதாபாத்திரம் நெப்போலியனுக்கு வழங்கப்பட்டிருக்கும். இந்தத் திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சரணிடம் அஜித் குமார், இது நான் நடிக்க வேண்டிய படம்; இதை நான் எப்படி மிஸ் செய்தேன் எனக் கூறியுள்ளார்.

இயக்குனர் சரண் டைரக்ஷனில் அமர்க்களம் காதல் மன்னன் உள்ளிட்ட படங்களில் அஜித் குமார் நடித்துள்ளார்; இயக்குனர் சரணை பொருத்தமட்டில் அவர் படங்களில் மிகவும் வித்தியாசமான கதை அம்சம் கொண்டது வட்டாரம் திரைப்படம். இந்த திரைப்படம் குறித்து அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ” இந்த படத்தில் நெப்போலியன் கதாபாத்திரத்தில் ரகுவரனை நடிக்க வைக்க முயற்சிகள் செய்தேன்; ஆனால் அந்த நேரத்தில் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவருக்கு ஈடான ஒரு கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடிக்க வைத்தேன்” என்றார்.

மேலும் இந்த படம் அஜித் குமாருக்கு மிகவும் பிடித்த படம் எனக் கூறிய இயக்குனர் சரண், இந்த படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தை நான் எப்படி மிஸ் செய்தேன்; இது நான் நடிக்க வேண்டிய படம் எனக் கூறினார் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க; வசூலில் ட்ரிபிள் சென்சுரி அடித்த துரந்தர் 2.. எத்தனை கோடிகள் தெரியுமா? முழு விவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com