ஹாட்ரிக் அடித்த இந்திய பங்குச் சந்தை.. முதலீட்டாளர்கள் காட்டில் பண மழை!

Share Market Today: இந்திய பங்குச்சந்தை இன்றைய வர்த்தகத்தை வலுவாக நிறைவு செய்தது. நிப்டி குறியீட்டை பொறுத்தமட்டில், 23,800 அருகில் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது.

Published on: March 18, 2026 at 5:16 pm

மும்பை, மார்ச் 18, 2026: இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாக தொடர்ச்சியான உயர்வுடன் வலுவாக நிறைவுற்றது. அந்த வகையில், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தை நிப்டி-யை பொறுத்தமட்டில் 23,800க்கு அருகில் காணப்பட்டது. சுருங்கச் சொல்வதென்றால், நிப்டி 50 – 197 புள்ளிகள் (0.83%) உயர்ந்து 23,777.80-இல் முடிந்தது.

பி.எஸ்.இ. சென்செக்ஸ் – 633 புள்ளிகள் (0.83%) உயர்ந்து 76,704.13-இல் நிலை கொண்டது. தொடர்ந்து, நிப்டி மிட்கேப் 100 – 1,115.45 புள்ளிகள் (2.02%) உயர்ந்து 56,289.85-இல் முடிந்தது. முன்னதாக, 1.30 மணி நிலவரத்தில் நிப்டி 50 – 254 புள்ளிகள் (1.08%) உயர்ந்து 25,835-இல் வர்த்தகமானது. அந்த வகையில், இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் 1% அதிகரித்தன.

ஆசிய பங்குச் சந்தைகள்

இன்றைய வர்த்தகத்தில் ஆசிய பங்குச்சந்தைகள் இன்று காலை உயர்வுடன் வர்த்தகம் செய்தன.

  • ஜப்பான் நிக்கெய் 225 – 1.38% உயர்வு
  • டோபிக்ஸ் (Topix) – 0.95% உயர்வு
  • தென் கொரியா கோஸ்பி (Kospi) – 2.8% பாய்ச்சி
  • கோஸ்டாக் (Kosdaq) – 1.66% உயர்வு
  • ஆஸ்திரேலியா S&P/ASX 200 – ஸ்திர நிலை

இந்திய ரூபாய் மதிப்பு

முன்னதாக, மார்ச் 17ஆம் தேதி வர்த்தகத்தில், இந்திய ரூபாய் 0.06% மதிப்பிழந்து, 92.37-க்கு டாலருக்கு நிகராக முடிவடைந்தது.

இதையும் படிங்க: முதலீடுக்கு 15.56% வருமானம்.. SBI பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீஸ் ஃபண்ட் எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com