புதுடெல்லியில் செந்தில் பாலாஜி.. 6.30 மணி நேரம் விசாரித்த சி.பி.ஐ.. பரபரப்பு தகவல்கள்!

Senthil Balaji: கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர்.

Published on: March 17, 2026 at 7:43 pm

புதுடெல்லி, மார்ச் 17 2026: கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய தவெக தலைவர் விஜய் 3 முறை சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்றது.

தொடர்ந்து கரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து இன்று விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜரானார். சுமார் 6.30 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தியது.

கரூர் கூட்ட நெரிசலின்போது உடனடியாக மருத்துவமனைக்கு சென்றது எப்படி? கூட்டத்தில் வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டிலில் செந்தில் பாலாஜியின் அறக்கட்டளை குறித்த ஸ்டிக்கர்கள் எப்படி இடம்பெற்றது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சிபிஐ எழுப்பியதாக கூறப்படுகிறது. இன்று விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் செந்தில் பாலாஜியை சிபிஐ விசாரணைக்கு அழைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை..சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com