Narendra Modi: திருச்சியில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
Narendra Modi: திருச்சியில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

Published on: March 11, 2026 at 12:39 pm
திருச்சி, மார்ச் 11 2026: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி பஞ்சப்பூரில் இன்று மாலை நடைபெறுகிறது. தமிழகத்தில் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் இது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு 30 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு 5 லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய மண்டலத்தை சேர்ந்த 18 மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பச்சமுத்து மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக நடைபெறும் மத்திய அரசு விழாவில் சுமார் ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் உரையாற்றும் இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சாம்பாரில் பல்லி… 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியருக்கு வாந்தி மயக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com