Coimbatore: கோவையில் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Coimbatore: கோவையில் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Published on: March 11, 2026 at 10:00 am
கோவை, மார்ச் 11, 2026: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று மதியம் சத்துணவு உண்ட 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து உடனடியாக சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவை ஆய்வு செய்த போது சாம்பாரில் இறந்தநிலையில் பல்லி ஒன்று கிடந்தது தெரிய வந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் குழுவினர் 30 மாணவர்கள் மற்றும் 13 மாணவிகளை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 43 மாணவ மாணவிகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் சிகிச்சை பெற்று வரும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
சம்பவம் குறித்து தெரிவித்த மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு, உணவில் பள்ளி விழுந்ததாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இதுபோது நடக்காது என்பதில் உறுதியாகவும் இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க : தொழிலதிபரை கடத்தி ₹1 கோடி பேரம்…கடத்தல் கும்பலுக்கு போலீசார் வலை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com