Erode: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தொழிலதிபரை கடத்தி ரூபாய் ஒரு கோடி பறித்த கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
Erode: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தொழிலதிபரை கடத்தி ரூபாய் ஒரு கோடி பறித்த கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Published on: March 10, 2026 at 4:21 pm
ஈரோடு, மார்ச் 10 2026: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் சென்னிமலைப்பாளையத்தைச் சேர்ந்த கௌதம் (வயது 28). இவரை கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி இரவு பெருந்துறை செல்லும் பிரதான சாலையில் வாய்க்கால் மேடு அருகே போலீசார் என்று கூறி நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கடத்தியது. சனிக்கிழமை பெருந்துறை காவல் நிலையத்தில் கௌதம் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது.
ஈரோட்டில் தனது நிறுவனத்தில் வேலையை முடித்துவிட்டு காரில் பெருந்துறைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கௌதம் கடத்தப்பட்டார். இவர் ஆன்லைனில் பங்கு வர்த்தகம் செய்வது குறித்து படிக்க விரும்புவோருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு கீழ் சுமார் 15 பேர் பணி புரிகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் மதுரவாயில் பகுதியை சேர்ந்த ஏஜே மணிகண்டன் என்ற ஊழியருடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி மணிகண்டன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இருப்பினும் நிறுவனத்தின் ரூ. 8.5 லட்சம் பணம் மணிகண்டனின் வங்கி கணக்கில் இருந்ததன் காரணமாக பிப்ரவரி 21ஆம் தேதி கௌதம் அவரது தம்பி மிதுனுடன் சென்னைக்கு சென்று பணத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் பிப்ரவரி 25ஆம் தேதி கௌதமை கடத்திய கும்பல் சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விஜயமங்கலம் டோல்கேட் அருகே மற்றொரு காரில் ஏற்றி கோயம்புத்தூர் நோக்கி சென்று அங்குள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்ததுள்ளது.
மறுநாள் கௌதமிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டி அதோடு மணிகண்டனையும் அங்கு கடத்தி அழைத்து வந்ததாக கௌதமிடம் அந்த கும்பல் தெரிவித்துள்ளது. பின்னர் கௌதம் பணம் கொடுக்காவிட்டால் இருவரையும் கொன்று விடுவதாக அந்த கும்பல் மிரட்டியது.
கௌதம் தனது தம்பி மூலம் ரூபாய் ஒரு கோடியை ஏற்பாடு செய்து பெருந்துறை உள்ள சிப்காட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கடத்தல் கும்பல் கூறியபடி ஒரு பேக்கரிக்கு அருகே வைத்துள்ளார். கடத்தல் கும்பல் பணத்தை எடுத்துக்கொண்டு மணிகன்டனையும் தூக்கி சென்றது கௌதம் அவரது கார் நிறுத்தப்பட்டிருந்த தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகம் அருகே விடுவிக்கப்பட்டார்.
சம்பவம் குறிதது வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த வழக்கில் எங்களுக்கு மணிகண்டன் மீது சந்தேகம் உள்ளது. கௌதமும் அவர் மீது சந்தேகம் தெரிவித்தார் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இதனால் மணிகண்டனை திங்கட்கிழமை பிடித்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் தீவிரவாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க எல்.பி.ஜி சிலிண்டர் சேவை பாதிப்பு.. பெங்களூரு, சென்னை ஹோட்டல்கள் நிலை என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com