மாவட்டந்தோறும் புதிய மருத்துவ கல்லூரிகள்.. சுகாதார துறையில் நாடு வளர்ச்சி.. பிரதமர் மோடி

Narendra Modi: நாடு சுகாதார துறையில் வளர்ந்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Published on: March 9, 2026 at 1:52 pm

புதுடெல்லி, மார்ச் 9, 2026: பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கள்கிழமை) கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் சுகாதார வளர்சிகள் வலுவடைந்துள்ளன என்று கூறினார். ‘சப்கா சாத்த் சப்கா விகாஸ் – மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற பட்ஜெட் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் உரையாற்றிய அவர், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது வெறும் விவாதம் அல்ல; அது பட்ஜெட்டின் அடித்தளமும், அரசாங்கத்தின் அர்ப்பணிப்பும் ஆகும் என்றார்.

நாடு தடுப்பு மற்றும் முழுமையான சுகாதாரக் கண்ணோட்டத்துடன் செயல்பட்டு வருகிறது; பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் ஆரோக்கிய மந்திரம் வழியாக, சுகாதார சேவைகள் கிராமங்களுக்கு விரிவாக்கப்படுகின்றன; யோகா மற்றும் ஆயுர்வேதம் போன்ற இந்திய பாரம்பரியங்கள் உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன” என்றார்.

இதையும் படிங்க: மக்களவையில் பரபரப்பு.. ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க தீர்மானம்.. மம்தா கட்சி நிலை என்ன?

மேலும், ‘கேர் எகானமி’ (பராமரிப்பு பொருளாதாரம்) வளர்ச்சியை வலியுறுத்திய அவர், பராமரிப்பாளர்களுக்கான உலகளாவிய தேவை அதிகரிப்பதால், நாட்டின் இளைஞர்களுக்கு புதிய திறன் அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் உருவாகின்றன” என்றார். மேலும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதில் பெருமை கொள்வதாக பிரதமர் தெரிவித்தார். எதிர்கால தொழில்நுட்பங்களில் மகள்களுக்கு சம வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, இளம் ஆராய்ச்சியாளர்கள் தடையின்றி புதுமைகளை உருவாக்கவும், புதிய யோசனைகளில் சோதனை செய்யவும் ஊக்குவிக்கும் வலுவான ஆராய்ச்சி சூழலை உருவாக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். மேலும், இளம் ஆராய்ச்சியாளர்கள் முழுமையான வாய்ப்புகளைப் பெற்று புதிய யோசனைகளில் பணியாற்றும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் திட்டமிட்டு அவமதிப்பு.. காட்டாட்சிக்கு முடிவு கட்டும் நேரம்.. பாஜக!

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் திட்டமிட்டு அவமதிப்பு.. காட்டாட்சிக்கு முடிவு கட்டும் நேரம்.. பாஜக!
C R Kesavan

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் திட்டமிட்டு அவமதிப்பு.. காட்டாட்சிக்கு முடிவு கட்டும் நேரம்..

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com