Vijay Sangeetha divorce case: நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
Vijay Sangeetha divorce case: நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

Published on: March 7, 2026 at 2:36 pm
Updated on: March 7, 2026 at 2:42 pm
சென்னை மார்ச் 7 2026; நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, இவர் விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இது சினிமா மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த விவாகரத்து மனுவில் நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் மீது சில புகார்களை சங்கீதா தெரிவித்து இருந்தார். நடிகை ஒருவருடன் ஈவு இரக்கமின்றி உறவை தொடர்கிறார் என தெரிவித்திருந்த சங்கீதா சம்பந்தப்பட்ட நடிகையுடன் விஜய் தொடர்பு படுத்தி பேசும்போதெல்லாம் அது தொடர்பான செய்திகள் பார்க்கும்போதெல்லாம் தானும் தனது குழந்தைகளும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறோம் எனவும் தெரிவித்திருந்தார்.
இது புயலை கிளப்பிய நிலையில், இந்த விவாகரத்து மனு தாக்களுக்கு பின்னர் நடிகர் விஜய் நடிகை திரிஷாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இது சினிமா தொடர்புடையவரின் திருமண நிகழ்ச்சி என்ற போதிலும் நடிகர் விஜய் திரிஷா ஒன்றாக ஒரே காரில் வந்து இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா தொடர்பான காதல் வதந்திகளை இது தீவிர படுத்தியது. இந்த நிலையில், நடிகர் விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் தான் இங்கிலாந்தை சேர்ந்தவர் என்றும் தான் வசிக்க நீலாங்கரை வீட்டில் விஜய் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்; மேலும் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதால் வீட்டில் தங்க அனுமதிக்க முடியாது என விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் தம்மை மிரட்டுவதாகவும் சங்கீதா புதிதாக தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க; அம்மா, அப்பா பார்க்கும் பெண்ணை திருமணம் செய்யுங்கள்.. விஜய்யின் வீடியோ வைரல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com