Actress Malavika Mohanan: சினிமாவில் நல்ல கதை அமைந்துவிட்டால் அது மொழி மற்றும் பிராந்திய எல்லைகளை கடந்து வெற்றி பெறும் என நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்
Actress Malavika Mohanan: சினிமாவில் நல்ல கதை அமைந்துவிட்டால் அது மொழி மற்றும் பிராந்திய எல்லைகளை கடந்து வெற்றி பெறும் என நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்

Published on: March 7, 2026 at 10:50 am
Updated on: March 7, 2026 at 10:55 am
சென்னை மார்ச் 7 2026; தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்; இவரது பூர்வீகம் கேரளா என்ற போதிலும் இவர் சென்னையில் வளர்த்த பெண்ணாகவே பார்க்கப்படுகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் மற்றும் தெலுங்கில் முன்னணி ஸ்டார் ஆன பாகுபலி நாயகன் பிரபாஸ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார்.
இந்த நிலையில் இந்திய சினிமாவில் நல்ல கதைகள் கொண்ட திரைப்படங்களுக்கு மொழி மற்றும் பிராந்திய எல்லைகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள நடிகை மாளவிகா மோகனன் இந்த எல்லைகளைக் கடந்து நல்ல கதைகளை கொண்ட திரைப்படங்கள் வெற்றி வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கதைகள் சொல்லும் விதத்தில் இன்றைய டைரக்டர்களை மனதார பாராட்டிய நடிகை மாளவிகா மோகனன், ஒரு திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிப்பது அந்த கதை மொழிகள் மற்றும் பிராந்திய எல்லைகளைக் கடந்து மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற உதவி செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : அம்மா, அப்பா பார்க்கும் பெண்ணை திருமணம் செய்யுங்கள்.. விஜய்யின் வீடியோ வைரல்!
தொடர்ந்து நடிகை மாளவிகா மோகனன், “நல்ல கதை, நல்ல நடிப்பு, நல்ல தொழில்நுட்பம் இருந்தால் அது எந்த மொழியிலும், எந்த பிராந்தியத்திலும் பார்வையாளர்களை சென்றடையும்” என்றும் “நடிகர்கள், பல்வேறு மொழிகளில் பணியாற்றுவதன் மூலம், இந்திய சினிமாவின் ஒற்றுமை மற்றும் பல்துறை தன்மையை வெளிப்படுத்துகின்றனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பல்வேறு மொழிகளில் பணியாற்றுவதால், கதை சொல்லும் பாணி மற்றும் கலை வடிவங்கள் பரிமாறப்படுகின்றன” எனவும் நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். நடிகை மாளவிகா மோகனன் மலையாள சினிமாவில் அறிமுகமானவர்; இவர் ரஜினிகாந்த் உடன் பேட்ட என்ற திரைப்படத்திலும், விஜயுடன் மாஸ்டர் என்ற திரைப்படத்திலும் இணைந்து நடித்திருந்தார். முன்னதாக நடிகை மாளவிகா மோகனன் அந்த அனுபவங்கள் குறித்தும் பேசி இருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.
இதையும் படிங்க : கற்பனை கலந்த வித்தியாசமான காதல் கதை.. சின்ன வயது ஆதித்ய கரிகாலனா இது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com