Double Occupancy: பொன்னியின் செல்வன் சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் விரைவில் வெளியாகிறது.
Double Occupancy: பொன்னியின் செல்வன் சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் விரைவில் வெளியாகிறது.

Published on: March 6, 2026 at 10:35 pm
சென்னை, மார்ச் 06 2026:‘பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இளம் வயது ஆதித்ய கரிகாலனாக நடித்தவர் சந்தோஷ். இவர் தற்போது ‘டபுள் ஆக்குபன்சி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி எழுதி, இயக்குகிறார். சம்யுக்தா விஸ்வநாத், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷண், வி.டி.வி.கணேஷ், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
அவ்னி மூவில் சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். சாந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
வித்தியாசமான காதல் மற்றும் கற்பனை கலந்த கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளாக படக்குழு தெரிவித்துள்ளது. இறுதிக்கட்டப் பணியில் இருக்கும் இப்படம் இம்மாதத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க : ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான்.. தீயாய் பரவும் புகைப்படம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com