Vijay-Trisha: சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் நடிகை திரிஷா ஒன்றாக கலந்து கொண்டனர்.
Vijay-Trisha: சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் நடிகை திரிஷா ஒன்றாக கலந்து கொண்டனர்.

Published on: March 5, 2026 at 10:15 pm
சென்னை மார்ச் 5 2026; சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் நடிகரும் தமிழக கட்சி கழக தலைவருமான விஜய் கலந்து கொண்டார்; அவருடன் ஒன்றாக நடிகை திரிஷாவும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டார்.
இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய்- திரிஷா குறித்து பல்வேறு கிசுகிசுக்கள் வெளியான வண்ணம் இருக்கும் நிலையில், இருவரும் ஒன்றாக திருமண விழாவில் கலந்து கொண்டது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துவிட்டது.
இது தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்; சிலர் இதுபோன்ற நிகழ்வுகளை நடிகர் விஜய் இன்றைய சூழ்நிலையில் தவிர்த்து இருக்க வேண்டும் என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
விஜய் சங்கீதா விவாகரத்து
விஜய் மனைவி சங்கீதா சமீபத்தில் விவாகரத்து கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்; அந்த மனுவில், நடிகர் விஜய் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
மேலும் இது போன்ற செய்திகள் சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ளும் போது தானும், தனது குழந்தைகளும் மனதளவில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறோம் என்பதையும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் தனது வாழ்க்கைக்கு குறுக்கே வந்த நடிகை குறித்து இந்த மனுவில் நான் எதுவும் குறிப்பிடவில்லை; அதே நேரம் தேவை ஏற்பட்டால் அவரையும் நான் இந்த மனுவில் குறிப்பிடுவேன் என விஜய் மனைவி சங்கீதா தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் நடிகை திரிஷாவுடன் திருமண விழாவில் ஒன்றாக கலந்து கொண்டது பெரும் சர்ச்சையையும் கிசுகிசுவையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க; ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான்.. தீயாய் பரவும் புகைப்படம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com