காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மாசுக்காடாக மாற்ற திமுக அரசு துடிப்பதா?..அன்புமணி கண்டனம்

Anbumani Ramadoss: காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மாசுக்காடாக மாற்ற திமுக அரசு துடிப்பதா என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: March 4, 2026 at 3:15 pm

சென்னை, மார்ச் 04 2026: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த ஆலங்கோட்டை கிராமத்தில் சாயப்பட்டறையுடன் கூடிய ஜவுளி பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதற்கு அப்பகுதியில் உள்ள மக்களும், உழவர்களும் கடும் எதிர்ப்பு பதிவு. வேளாண்மைக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேட்டை ஏற்படுத்தும் என்பதை அறிந்த காவிரி பாசன மாவட்டங்களில் சாயப்பட்டறையுடன் கூடிய ஜவுளிப் பூங்காவை அமைப்பது கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்காக்கள் அமைக்கப்படுவதால் ஏற்படும் கேடுகள் எல்லையில்லாதவை. சாயப்பட்டறைகளால் இரு வகையாக பாதிப்புகள் ஏற்படுகின்றன. முதலாவது சாயப்பட்டறைகளின் தேவைக்காக தினமும் கோடிக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் ராட்சத எந்திரங்களைக் கொண்டு உறிஞ்சி எடுக்கப்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இடுப்பில் இருந்த துண்டை தலைக்கு கிரீடமாக மாற்றியவர் அய்யா வைகுண்டர்.. மு.க ஸ்டாலின்!

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண்மை சார்ந்த தொழில்களை அமைப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசு செய்யவில்லை. அதை விடுத்து வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் வேளாண்மைக்கு வேட்டு வைக்கும் சாயப்பட்டறைகளை அமைப்பதை அனுமதிக்க முடியாது.

மக்களுக்கு எந்த வகையிலும் பயனற்ற, பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தக்கூடிய சாயப்பட்டறையுடன் கூடிய ஜவுளி பூங்காவை ஆலங்கோட்டை கிராமத்தில் அமைக்கவும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: 2026 சட்டமன்ற தேர்தல்.. வட சென்னையில் விஜய் போட்டி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com