பாக்ஸ் ஆபீஸ் கலக்ஷனில் தாய் கிழவி எப்படி? 3 நாள் ரிப்போர்ட்.. முழு விவரம்!

Thaai kizhavi boxoffice collection: பாக்ஸ் ஆபீஸ் கலக்ஷனில் தாய் கிழவி படம் சாதனை படைத்துள்ளது.

Published on: March 3, 2026 at 3:59 pm

Updated on: March 3, 2026 at 4:02 pm

சென்னை, மார்ச் 03 2026: விக்ரம் பாரத் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ‘தாய்கிழவி’. இந்தப் படத்தில் இதுவரை இல்லாதவகையில் புதுவிதமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ராதிகா. இந்தப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியான முதல் நாள் (வெள்ளிக்கிழமை) 2.65 கோடியும், சனிக்கிழமை 4.65 கோடியும் வசூல் செய்துள்ளது.

இந்த படம், குடும்பங்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராதிகா சரத்குமாரின் திமிர்பிடித்த பெண்மணியான பவுனுதாயி கதாபாத்திரம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
இயக்குநர் விக்ரம் பாரத், சமூக விஷயங்களை சொல்லும் வகையில் உருவாக்கியிருக்கும் படம், விமர்சகர்களிடமும் நல்ல மதிப்பீடு பெற்றுள்ளது.

தாய்க்கிழவி 2 நாட்களில் மொத்தம் ₹7.30 கோடி வசூல் செய்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை ரூ. 7 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் அதன் முதல் வார இறுதியில் தோராயமாக ரூ. 16 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: ‘வித் லவ்’ ஓடிடி ரிலீஸ்..எதில், எப்போது தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com