தி.மு.க 25 தொகுதிகளை தாண்டாது.. த.வெ.க அதிரடி!

Assembly Election 2026: காங்கிரஸ் இல்லையென்றால் தி.மு.க.வால் 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெற முடியாது என த.வெ.க நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

Published on: March 2, 2026 at 5:28 pm

சென்னை, மார்ச் 2, 2026: தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க 25 தொகுதிகளை தாண்டாது என தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நிர்மல் குமார் கூறியுள்ளார்.

தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதால் கூட்டணி தொடர்பான பேச்சுகள் இழுபறி ஆகிவருகின்றன.
இதற்கிடையில் காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “த.வெ.க. காங்கிரஸூடன் கூட்டணி அமைக்க விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சியும் தி.மு.க.விடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருகிறது. இது தொடர்பான பேச்சுகள் தற்போது எழவில்லை என்ற போதிலும், 39 சட்டமன்ற தொகுதிகள் வரை கேட்பதாகவும், 2 ராஜ்யசபா சீட் கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், உள்ளாட்சி தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், காங்கிரஸ், தி.மு.க கூட்டணி ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க 25 தொகுதிகளை தாண்டாது என தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நிர்மல் குமார் கூறியுள்ளார்.

இது குறித்து சென்னையில் பேசிய த.வெ.க இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், “காங்கிரஸ் மட்டும் இல்லையென்றால் திமுகவால் 25 தொகுதிகளைகூட தாண்ட முடியாது. இதுதான் இன்றைய களநிலவரம்” என்றார்.
நிர்மல் குமாரின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நாங்கள் பேரம் பேசும் கட்சியல்ல.. தொல். திருமாவளவன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com